×

அனைத்து வணிகர் சங்க 2ம் ஆண்டு துவக்க விழா

நாமக்கல், டிச.17: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அனைத்து வணிகர் சங்கத்தின் 2ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. சங்கத்தலைவர் வருணன் தலைமை வகித்தார். செயலாளர் பூபதி வரவேற்றார். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பேரமைப்பின் கொடியை ஏற்றி வைத்து பேசினார்.விழாவில், மூத்த வணிகர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், பொருளாளர் சீனிவாசன், இணை செயலாளர் உதயகுமார், மாநில துணை தலைவர் சுப்ரமணியம், மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணன், மூத்த ஆலோசகர்கள் சின்னையன், ஜவகர், காதர் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அனைத்து வணிகர் சங்க 2ம் ஆண்டு துவக்க விழா appeared first on Dinakaran.

Tags : All ,Merchants ,Association 2nd Annual Inaugural Ceremony ,Namakkal ,All Merchants Association ,Kollimalai, Namakkal district ,Association ,Varunan… ,2nd Year Inaugural Ceremony ,Dinakaran ,
× RELATED எல்லாம் படங்களும் அடுத்து அடுத்து வந்துட்டு இருக்கு - Vetrimaaran Speech at Garudan Trailer Launch.