×

எருமலைநாயக்கன்பட்டியில் தொடர் மணல் திருட்டை கட்டுப்படுத்த கோரிக்கை

தேவதானப்பட்டி, டிச. 17: தேவதானப்பட்டி முருகமலையில் இருந்து தர்மலிங்கபுரம், கதிரப்பன்பட்டி, சில்வார்பட்டி வழியாக பெரியஓடை ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு செல்கிறது. இது தவிர எருமலைநாயக்கன்பட்டியில் இருந்து மஞ்சளாறு அணை உபரி வாய்க்கால், மற்றும் காட்டாற்று ஓடைகளும் இந்த வேட்டுவன்குளம் கண்மாய்க்கு செல்கிறது. இந்த மூன்று ஓடைகளிலும் எருமலைநாயக்கன்பட்டியில் சிலர் இரவு நேரங்களில் டிராக்டர் மூலம் மணல் திருடிவருவதாக அந்த பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி முருகன் கூறுகையில், ‘‘வேட்டுவன்குளம் கண்மாயை மையப்படுத்தி ஓடையின் முகப்பு பகுதியில் தேங்கியுள்ள மணல் திட்டுகளை இந்த பகுதியைச் சேர்ந்த சிலர் இரவு நேரங்களில் டிராக்டர் மூலம் 2 நாட்களுக்கு ஒரு முறை இரவு முழுக்க மணலை திருடி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அதனை சுற்றியுள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் வேட்டுவன்குளம் கண்மாயை ஒட்டியுள்ள வண்ணான்கரட்டில் செம்மண் கிட்டத்தட்ட 100கும் மேற்பட்ட யூனிட் திருடப்பட்டுள்ளது. இதனால் கனிமவளம் பாதிப்பது மட்டுமின்றி விவசாயிகளின் விளைநிலங்களில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் பாதித்து வருகிறது. ஆகையால் வருவாய்த்துறையினர், போலீசார் இணைந்து இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

The post எருமலைநாயக்கன்பட்டியில் தொடர் மணல் திருட்டை கட்டுப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Erumalainayakanpatti ,Devadanapatti ,Murugamalai ,Dharmalingapuram ,Kathirappanpatti ,Silwarpatti ,Periyaoda Jayamangalam ,Vedtuvankulam Kanmai.… ,
× RELATED மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை