×

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடகோரி நடைபயணம்

முதுகுளத்தூர், டிச.17: முதுகுளத்தூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நடைபயணம் நடந்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நடை பயணம் இயக்கம் சார்பில் மீசல் கிராமத்தில் தொடங்கிய நடை பயண பேரணி தேரிருவேலியில் முடிந்தது. நடைபயணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் தலைமை வகித்தார். தாலுகா குழு செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மீசல் கிளைச் செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணகி நடை பயணத்தை துவங்கி வைத்தார். இதில் முதுகுளத்தூர் தொகுதி கண்மாய்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் வைகை நீரை உரிய பங்கீடு செய்து வழங்கிட வேண்டும்.

தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை வழங்கிட வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ள குறைபாடு சரி செய்து வேலைக்கான கூலியை உடனே வழங்கிட வேண்டும். பட்டியலின மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள காலனி வீடுகள் இடிந்த நிலையில் உள்ளது, அந்த தொகுப்பு வீடுகளை அகற்றி புதிய வீடு கட்டி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசன் தேரிருவேலி கிராமத்தில் நடை பயணத்தை நிறைவு செய்து வைத்தார். இந்த நடை பயணத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடகோரி நடைபயணம் appeared first on Dinakaran.

Tags : Mudukulathur ,Dinakaran ,
× RELATED முதுகுளத்தூர் அருகே தொட்டுவிடும்...