×

கொடைக்கானலில் கொட்டி வரை அருவியை சுற்றுலா தலமாக்க ஆய்வு

கொடைக்கானல், டிச. 17: கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றியுள்ள மலைக்கிராம பகுதிகளில் பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. குறிப்பாக மலைக்கிராமங்களை சுற்றி நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கி- கோம்பை மலைக்கிராமங்களின் இடைப்பகுதியில் அமைந்துள்ளது கொட்டி வரை அருவி. மழை பெய்யும் நேரங்களில் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும் அழகு காண்பவர்களின் கண்களை கொள்ளை ெகாள்ளும் அளவிற்கு இருக்கும். இந்த அருவி பகுதிக்கு அநேக சுற்றுலா பயணிகளே சென்று வருவர். எனவே இந்த கொட்டி வரை அருவி பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து நேற்று உதவி சுற்றுலா அலுவலர் சுதா தலைமையில் அத்துறையினர், தன்னார்வ தொண்டு அமைப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கொட்டி வரை அருவி பகுதியினை ஆய்வு செய்தனர். அருவியின் பாதுகாப்பு, சென்று வரக்கூடிய தூரம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. இதுபற்றி உரிய திட்டங்கள் அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டு கொட்டி வரை அருவி பகுதியை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா துறையினர் தெரிவித்தனர்.

The post கொடைக்கானலில் கொட்டி வரை அருவியை சுற்றுலா தலமாக்க ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Kotti ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் மலை கிராமத்தில்...