×

தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது

 

பந்தலூர்,டிச.16: பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டம் டேன்டீ பகுதியில் மலைப்பாம்பு பிடிப்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டம் டேன்டீ சரகம் 3 பகுதியில் நேற்று பெண் தொழிலாளர்கள் பசுந்தேயிலை பறித்துக் கொண்டிருக்கும் போது மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சம்பவம் குறித்து டேன்டீ நிர்வாகம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி சேரம்பாடி வனச்சரகர் உத்தரவின்பேரில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களை அச்சுறுத்திய 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை அரைமணி நேரமாக போராடி பிடித்து மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்கார் உத்தரவின் பேரில் கோட்டமலை அடந்த வனப்பகுதியில் விட்டனர். மலைபாம்பு பிடிபட்டு அகற்றப்பட்டதால் தோட்டத் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

The post தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Tandee ,Serambadi Government Tea Estate ,Bandalur, Nilgiri district… ,Dinakaran ,
× RELATED வெயில் ருத்ர தாண்டவம்: நீர் நிலைகளை தேடி அலையும் யானைகள் கூட்டம்