×

முத்தாயம்மாள் கல்லூரி மாணவி சாதனை

ராசிபுரம், டிச.16: அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம், இந்திய அரசின் கல்வி அமைச்சகம், ஏஆர்எம் கல்வி சமுதாயம் மற்றும் எஸ்டிஎம் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை இணைந்து தேசிய அளவில் இன்வென்டர்ஸ் சேலஞ்ச் என்ற தலைப்பில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான போட்டியை நடத்தியது. இதில், நாடு முழுவதிலுமிருந்து பெறப்பட்ட 1372 கருத்துருக்களில், இறுதிப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 கல்லூரிகளில், ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியின் 2ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவி சௌபர்னிகா வெற்றி பெற்றார்.

மாணவிக்கு அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் தலைவர் பேராசிரியர் மனசீதாராம் பாராட்டு சான்றிதழ், பரிசுத்தொகை ₹50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவி மற்றும் உறுதுணையாக இருந்த கல்லூரி முதல்வர் மாதேஸ்வரன், துறை பேராசிரியர் கோபி உள்ளிட்டோருக்கு, முத்தாயம்மாள் எஜூகேசனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேசன் தாளாளர் கந்தசாமி, செயலாளர் மற்றும் மேனேஜிங் டிரஸ்டி குணசேகரன், இணை செயலாளர் ராகுல் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

The post முத்தாயம்மாள் கல்லூரி மாணவி சாதனை appeared first on Dinakaran.

Tags : Muthaiammal College ,Rasipuram ,All India Institute of Technical Education ,Ministry of Education ,Government of India ,ARM Education Society ,Muthayammal College ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து