×

கிராமங்களுக்குள் இரவில் உலா வரும் 60 யானைகள்: பட்டாசு வெடித்து விரட்டும் மக்கள்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம் வனச்சரக பகுதிகளில் உள்ள காடுகளில், 100க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் தினமும் இரவு நேரத்தில், அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து, தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள ராகி, அவரை, துவரை, தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ், வாழை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

நேற்று முன்தினம் இரவு, நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 60 யானைகள், கூட்டமாக வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து மரகட்டா, நொகனூர், ஆலல்லி, பூதுகோட்டை, சாப்பராணப்பள்ளி, லக்கசந்திரம், தாவரகரை, அர்தகூர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து, ராகி, துவரை உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்துள்ளன.

நேற்று காலை, ஆலல்லி கிராமம் அருகே சுற்றித்திரிந்த யானைகளை பொதுமக்கள் விடிய, விடிய பட்டாசு வெடித்து விரட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டினர். தொடர்ந்து பயிர்கள் சேதமடைந்து வருவதால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

The post கிராமங்களுக்குள் இரவில் உலா வரும் 60 யானைகள்: பட்டாசு வெடித்து விரட்டும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Krishnagiri district ,Thali ,Javalagiri ,Anchetty ,Urigam forest ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு