×

டிஎன்பிஎஸ்சிக்கு புது தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப்-2 பணியிடங்கள் 121, குரூப் 2ஏ பணியிடங்கள் 5097 ஆகியவற்றை நிரப்புவதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு பிப்.23ம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் மாதம் வரை வெளியிடப்படாததை கடந்த நவம்பர் 6ம் தேதி அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியிருந்தேன்.

டிசம்பரில் முடிவு வெளியிடப்படும் என அமைச்சர் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே, தேர்வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும். தேர்வாணையத்திற்கு புதிய தலைவரையும், 10 உறுப்பினர்களையும் உடனடியாக நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post டிஎன்பிஎஸ்சிக்கு புது தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Anbumani ,CHENNAI ,BAMA ,President ,Tamil Nadu ,
× RELATED முல்லை பெரியாறு அணை தொடர்பான கூட்டம் ரத்து: அன்புமணி ராமதாஸ் வரவேற்பு