×

புதிய வகை கொரோனா தொற்றால் மக்கள் அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய வகை கொரோனா தொற்று சிங்கப்பூர் மற்றும் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பரவி வருகிறது. இது 3 அல்லது 4 நாட்களில் சரியாகிவிடும் என்பதால் மக்கள் பதற்றமடைய தேவையில்லை. கேரளாவில் இந்த புதிய வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பெரிய அளவில் மக்கள் அச்சப்பட தேவையில்லை.

The post புதிய வகை கொரோனா தொற்றால் மக்கள் அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,M.Subramanian ,Chennai Koturpuram ,Singapore ,Kerala ,
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...