×

சில்லி பாயின்ட்…

* ஜிம்பாப்வே அணியுடன் ஹராரேவில் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஜிம்பாப்வே 42.5 ஓவரில் 166 ரன் (ஜோஷ் லிட்டில் 6 விக்கெட்); அயர்லாந்து 40.1 ஓவரில் 170/6 (கேம்பர் 66, டெக்டர் 21, டக்கர் 28, அடேர் 25*).

* தமிழ்நாட்டில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டித் தொடர், ஜன. 19ம் தேதி கோலாகலமாகத் தொடங்க உள்ளது. போட்டிகள் ஜன.31 வரை சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் நடைபெற உள்ளன. இந்த தொடரில் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 5500+ வீரர், வீராங்கனைகள் (யு-18) பங்கேற்கின்றனர். காட்சி போட்டியாக சிலம்பம் உள்பட மொத்தம் 27 விளையாட்டுகளில் போட்டிகள் நடக்க உள்ளன. ஸ்குவாஷ் அறிமுகமாகிறது.

* ஆசிய கோப்பை யு-19 ஒருநாள் போட்டித் தொடரின் 2வது அரையிறுதியில் இந்தியாவுடன் நேற்று மோதிய வங்கதேச அணி 4 வித்தியாசத்தில் வென்று பைனலுக்கு முன்னேறியது. இந்தியா யு-19 42.4 ஓவரில் 188 ரன் (முஷீர் கான் 50, முருகன் அபிஷேக் 62); வங்கதேசம் யு-19 42.5 ஓவரில் 189/6 (ஆரிபுல் இஸ்லாம் 94, அஹ்ரர் அமின் 44). துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் யுஏஇ யு-19 அணி 11 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஐக்கிய அரபு அமீரகம் 47.5 ஓவரில் 193 ரன்; பாகிஸ்தான் யு-19 49.3 ஓவரில் 182. நாளை நடக்க உள்ள பைனலில் வங்கதேசம் யு-19 அணியுடன் யுஏஇ யு-19 அணி மோதுகிறது.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Ireland ,Zimbabwe ,Harare ,Zimbabwe… ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...