×

சென்னை பேசின் பிரிட்ஜில் ரயில் தடம் புரண்டு விபத்து: பயணிகள் யாரும் இல்லாததால் விபத்து தவிர்ப்பு

சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்ற ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கடந்த சில நாட்களாக ரயில் விபத்துகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவ்வப்போது சிறிய ரயில் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2 மணிக்கு பேசின் பிரிட்ஜ் பணிமனையை நோக்கி ஒரு எம்ட்டி ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது.

சரியாக 2.30 மணிக்கு பேசின் பிரிட்ஜ் பணிமனைக்குள் நுழைந்த போது ரயில் பெட்டியின் ஒரு கோச்சிலிருந்த 4 சக்கரங்கள் தரையிறங்கின. அதில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தினார் . சம்பவம் குறித்து பணியிலிருந்த ஊழியர்கள் உயரதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தரையிறங்கிய 4 சக்கரங்களை மேலே கொண்டுவரும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மழை பெய்து வருவதால் சற்று இந்த பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை பேசின் பிரிட்ஜில் ரயில் தடம் புரண்டு விபத்து: பயணிகள் யாரும் இல்லாததால் விபத்து தவிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Basin Bridge train derailment ,Chennai ,Chennai Basin Bridge ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...