×

தமிழகத்தில் கொரோனா பரவல் உயர்வதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை: சுகாதாரத்துறை விளக்கம்

சென்னை: “தமிழகத்தில் கொரோனா பரவல் உயர்வதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் இது விளக்கம் அளித்த பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்; தமிழகத்தில் கொரோனா பரவல் உயர்வதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை.

தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது போன்ற தவறான தகவலைப் பரப்பி மக்களை பதற்றம் அடையச் செய்ய வேண்டாம். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே தினசரி 10 க்கும் குறைவாகவே உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்திருப்பது கேரளா, சிங்கப்பூரில் மட்டும் தான். கேரளாவில் பரவிவரும் புதிய வைரஸால் பாதிப்பில்லை. தற்போது கேரளத்தில் பாதிப்பு அதிகரித்து வருவதை கவனித்து வருகிறோம். அது ஏற்கெனவே தமிழகத்தில் பரவிய கரோனா தொற்றுதானா அல்லது புதிய வகை உருமாற்றமா என்பது தெரியவில்லை.

அதேவேளையில், மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்ஃப்ளூயன்ஸா தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளை நாடுவோருக்கு கரோனா அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் அவா்களுக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அதி தீவிரமாக கரோனா பாதிப்பு இருந்தபோதிலும், அதனை திறம்பட எதிா்கொண்ட அனுபவம் தமிழகத்துக்கு இருப்பதால், கேரளத்தின் சூழலைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை இவ்வாறு கூறினார்.

The post தமிழகத்தில் கொரோனா பரவல் உயர்வதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை: சுகாதாரத்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Health Department ,Chennai ,Coronavirus outbreak ,
× RELATED தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம்...