×

பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ஒன்றிய வனத்துறை ஒப்புதல்: திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார் தகவல்

சென்னை: பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ஒன்றிய வனத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது என திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். பொன்னேரி அடுத்த பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு ஏரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் விளங்கி வருகிறது. முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம், இறால் உள்ளிட்டவை கிடைக்காமல் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

அவ்வப்போது அடைபடும் முகத்துவாரத்தை சொந்த செலவில் தற்காலிகமாக மீனவர்களே தூர்வாரி வரும் நிலையில் நிரந்தர முகத்துவாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, கடந்த மாதம் ரூ.27 கோடி மதிப்பீட்டில் நிரந்திர முகத்துவாரம் அமைக்க தமிழக அரசு திட்டம் தயாரித்து பல்வேறு துறைகளின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. 2022-ல் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. வடக்கில் 160 மீட்டர் தெற்கில் 150 மீட்டர் நீளத்துக்கு 4 மீட்டர் உயரத்தில் அலை தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளது.

40 ஆண்டுகளாக செயல்படுத்த முடியாமல் இருந்த நிலையில் ஒன்றிய வனத்துறை நேற்று ஒப்புதல் வழங்கியதாக திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; பழவேற்காடு மீனவ மக்களின் புலிகாட் முகத்துவாரம் எனும் திட்டம் 40 ஆண்டுகளாக செயல்படுத்த முடியாமல் இறுதியாக நான் எடுத்துக்கொண்ட கடும் முயற்சிகளால் ஒன்றிய சுற்றுசூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற்று 16.07.2023 அன்று 26 கோடி மதிப்பீட்டில் பணி துவங்கப்பட்டது.

ஒன்றிய வனத்துறையின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட, எனது தொடர் முயற்சியால் பல இடர்பாடுக்கிடையில் இன்று (14.12.2023) மாலை 07:00 மணியளவில் இறுதியாக வனத்துறையின் ஒப்புதலையும் பெற்றேன். இன்னும் 2 மாத காலத்திற்குள்ளாக இப்பணி விரைவாக செயல்படுத்தப்பட்டு முடிக்கப்படும் இவ்வாறு கூறினார்.

The post பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ஒன்றிய வனத்துறை ஒப்புதல்: திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார் தகவல் appeared first on Dinakaran.

Tags : EU Forest Department ,Thiruvallur M. B. Jayakumar ,Chennai ,Union Forest Department ,Pavevkhat ,Thiruvallur ,M. B. Jayakumar ,EU Forestry Department ,Face ,Proverbs ,Thiruvallur M. B. ,Jayakumar ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...