×

வலுவான நிலையில் ஆஸி

பெர்த்: ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் ஆடவர் அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்களை கொண்ட டெஸட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் நேற்று பெர்த் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் தரப்பில் அமெர் ஜமால், குர்ரம் ஷாசத் ஆகியோர் முதல்முறையாக சர்வதேச களத்தில் அறிமுகமாயினர்.தொடக்க வீரர்களாக களம் கண்ட டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா இருவரும் ஷாகின் அப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே 14ரன் சேர்த்தனர். அந்த ரன் குவிப்பு வேகம் தொடர, சீரான இடைவெளியில் விக்கெட்களும் விழுந்தன.

தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டுக்கு 126ரன் சேர்த்த நிலையில் கவாஜா 41ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 16, ஸ்டீவன் ஸ்மித் 31, டிராவிஸ் ஹெட் 41 ஆகியோர் அடித்து ஆடி வெளியேறினர். ஆனால் வார்னர் தனது 26வது டெஸ்ட் சதத்தை விளாசினார். கூடவே 150ரன்னை கடந்தவர் 164ரன்னில் அறிமுக வீரர் அமெர் ஜமால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் வார்னர் 211பந்தில் 16பவுண்டரி, 4சிக்சர் விரட்டி இருந்தார்.

அடுத்த சில ஓவர்களில் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது ஆஸி முதல் இன்னிங்சில் 84ஓவருக்கு 5விக்கெட்களை இழந்து 346ரன் குவித்துள்ளது. பாக் தரப்பில் அமெர் ஜமால் 2, குர்ரம் ஷாசத், பாகீம் அஷ்ரப், ஷாகின் அப்ரிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். களத்தில் மிட்செட் மார்ஷ் 15, அலெக் கேரி 14ரன்னுடன் 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளனர். அதனால் ஆஸி வலுவான ஸ்கோரை எட்டும் உறுதியான நிலையில் உள்ளது.

The post வலுவான நிலையில் ஆஸி appeared first on Dinakaran.

Tags : Aussies ,Perth ,Australia ,Pakistan ,Aussie ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...