×

சில்லி பாய்ன்ட்

* பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் நிதா தர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அதனால் இப்போது நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், எஞ்சிய ஆட்டங்களுக்கு பாத்திமா சனா(22) கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வசதியாக தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா, வேகம் காகிசோ ரபாடா ஆகியோருக்கு டி20, ஒருநாள் தொடர்களில் இருந்து ஓய்வளிக்கப் பட்டுள்ளது. மேலும் உள் நாட்டு தொடர்களில் விளையாடவும் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதில் உலக கோப்பை அரையிறுதி போட்டியின் போது ரபாடா காயமடைந்தற்கும் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

* ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரான் கிரீன்(24) பேட்டி ஒன்றில், ‘எனக்கு நாள்பட்ட சிறுசீரக நோய் உள்ளது. என் தாய் கருவுற்று இருந்த போதே அது கண்டு பிடிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் 12 வயது வரைதான் இருப்பேன் என்று கூட டாக்டர்கள் கூறினர். எனக்கு சிறுநீரகம் தனது வேலையை சரிவர செய்யாது. ஆனால் அது என் உடலின் செயல்பாடுகளை பாதிக்கவில்லை. ஆனால் அதை சரிவர கவனிக்கவில்லை என்றால் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இதுவரை இதை சக வீரர்கள், நண்பர்களிடம் பகிர்ந்துக் கொண்டதில்லை’ என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

* ஒடிஷா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டி புவனேஸ்வரத்தில் நடக்கிறது. அதன் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்திய வீரர் சதீஷ்குமார் கருணாகரன் 21-17, 21-17 என நேர் செட்களில் இஸ்ரேல் வீரர் டானில் டுபொவென்கோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லோகேஷ் விசுவநாதன், அனுஷா சந்திரமதி சுப்ரமணி இணையும் காலிறுதிக்கு தகுதிப் பெற்றது.

* மலேசியாவில் ஆடவர் இளையோர் உலக கோப்பை ஹாக்கிப்போட்டி நடக்கிறது. அங்கு நேற்று நடந்த முதல் அரையிறுதியில் ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் இ்ந்திய அணியை வீழ்த்தியது. அதனால் இந்திய அணி டிச.16ம் தேதி நடைபெறும் 3வது இடத்துக்கான ஆட்டத்தில் களம் காணும்.

The post சில்லி பாய்ன்ட் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Nita Dhar ,Dinakaran ,
× RELATED சில்லிபாயிண்ட்….