×

நடிகர் சூர்யாவை கைது செய்யக்கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

ஆவடி:ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததாக பாமகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பாமக மாநில துணை பொதுச்செயலாளர் சேகர் தலைமை வகித்தார். பின்னர் ஆவடி போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் இதுகுறித்து பாமகவினர் புகாரளித்தனர். அதில், ஜெய்பீம் படத்தில் வன்னிய சமுதாய மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளாதாகவும் இரு சமூகத்திற்கும் பதற்றத்தை உருவாக்கி இருப்பதாகவும் எனவே நடிகர் சூர்யாவை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இதையடுத்து, போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், மாநில துணை அமைப்பு செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஞானப்பிரகாசம், பிரகாஷ், மாநில மகளிர் அணி செயலாளர் சசிகலா ஜெயராமன், மாநில இளைஞரணிச் செயலாளர் குரு ஏழுமலை, மாவட்ட தலைவர்கள் ஹரிஸ், பாண்டுரங்கன், பகுதிச்செயலாளர்கள் செந்தில், வக்கீல் கோபிநாத், கோட்டீஸ்வரன், லோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர். …

The post நடிகர் சூர்யாவை கைது செய்யக்கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Surya ,Avadi ,Bamakavins ,Bamaka State ,Deputy General Secretary ,
× RELATED இனியும் பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை: திருச்சி சூர்யா பதிவு