×

சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், மாண்புமிகு மேயர் அவர்களின் 74வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (14.12.2023) நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகராட்சி, வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட மேயரின் 74வது வார்டு பகுதிகளில் இதுநாள்வரை மங்களாபுரம், பிரிஸ்லி நகர், ஏகாங்கிபுரம், செல்வபெருமாள் கோயில் தெரு, சந்தியப்பன் தெருக்கள், நேரு ஜோதி நகர், சாஸ்திரி நகர், ஆதிசேச நகர், ராஜீவ் காந்தி நகர், சேமாத்தம்மன் காலனி, குளக்கரை சாலை, பெரம்பூர் செக்கு தெரு, காவாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் 4,950 குடும்பங்களுக்கு அரிசி, பால் பவுடர் பாக்கெட்டுகள், கோதுமை மாவு பாக்கெட்டுகள், போர்வை மற்றும் ரொட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, புதிய வாழைமாநகர், கிருஷ்ணதாஸ் சாலை, சாமியார்மடம், போல்டன் தெரு, பெரம்பூர் குறுக்குத் தெரு, சந்திரயோகி சமாதி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1,050 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் நாளை (15.12.2023) வழங்கப்படுகிறது.

The post சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Cyclone Mikjam ,Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,councilor ,Hon'ble Mayor ,Chennai Corporation ,VK Nagar Mandal ,post ,Migjam storm ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...