×

தமிழகம் முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: 7 பேர் ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளாக, 13 பேர் சார் ஆட்சியர்களாக நியமனம்

சென்னை : தமிழகம் முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவு :

*தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஐஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளார்

*செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஆர்.அனாமிகா-நியமனம்

*நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக எச்.ஆர்.கவுசிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*மயிலாடுதுறை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஷபீர் ஆலம் நியமனம்

*புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக அஃப்தாப் ரசூல் நியமிக்கப்பட்டுள்ளார்.

*தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக கவுரவ் குமார் நியமனம்

*கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஸ்வேதா சுமனை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு

*செங்கல்பட்டு மாவட்ட சார் ஆட்சியராக வி.எஸ்.நாராயண சர்மா -நியமனம் செயப்பட்டுள்ளார்

*விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் சார் ஆட்சியராக திவ்யன்ஷ நிகமை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு

*சேலம் மாவட்டம் மேட்டூர் சார் ஆட்சியராக என்.பொன்மணியை நியமனம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு

*கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியராக கேதரின் சரண்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சார் ஆட்சியராக ஆர்.ஏ.பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*நாகை சார் ஆட்சியராக குணால் யாதவ், திருவள்ளூர் பொன்னேரி சார் ஆட்சியராக வகே சங்கத் பல்வந்த் நியமனம்

*நெல்லை சேரன்மகாதேவி சார் ஆட்சியராக அர்பித் ஜெயின், பரமக்குடி சார் ஆட்சியராக அபிலாஷா கவுர் நியமனம்

*திருவண்ணாமலை செய்யாறு சார் ஆட்சியராக பல்லவி வர்மா, திருப்பூர் சார் ஆட்சியராக சவுமியா ஆனந்த் நியமனம்

*பெரம்பலூர் சார் ஆட்சியராக எஸ்.கோகுல், கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியராக ராஷ்மி ராணி நியமனம்

The post தமிழகம் முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: 7 பேர் ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளாக, 13 பேர் சார் ஆட்சியர்களாக நியமனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Rural ,Agency ,Sar ,Chennai ,Chief Secretary ,Sivadas Meena ,Rural Development Agency ,Dinakaran ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து