×

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

பிரிட்ஜ் டவுன்: இங்கிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து முதலில் விளையாடிய ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் மோதி வருகின்றன. பார்படாஸ், பிரிட்ஜ்டவுனில் நடந்த முதல் போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீசியது. இங்கிலாந்து 19.3 ஓவரில் 171 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பில் சால்ட் 40 ரன் (20 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் பட்லர் 39 ரன் (31 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். லிவிங்ஸ்டன் 27 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரஸ்ஸல், அல்ஜாரி ஜோசப் தலா 3, ரொமாரியோ 2 விக்கெட் எடுத்தனர். அதன் பிறகு 20 ஓவரில் 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.

அந்த அணியின் பிராண்டன் கிங் 22 (12 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), கைல் மேயர்ஸ் 35 (21 பந்து, 4 சிக்சர்), ஷாய் ஹோப் 36 ரன் (30 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். நிகோலஸ் பூரன் 13, ஹெட்மயர் 1, ரொமாரியோ (0) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் 14.4 ஓவரில் 123 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், கேப்டன் ரோவ்மன் பாவெல் – ஆந்த்ரே ரஸ்ஸல் இணைந்து இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்து இலக்கை எட்டினர். வெஸ்ட் இண்டீஸ் 18.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 172ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. பாவெல் 31 ரன் (15 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ரஸ்ஸல் 29 ரன்னுடன் (14 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ரெஹன் அகமது 3, அடில் ரஷீத் 2 விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகனாக ரஸ்ஸல் தேர்வு செய்யப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 இன்று இரவு நடைபெற உள்ளது.

The post இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி appeared first on Dinakaran.

Tags : T20I ,England ,West Indies ,Bridgetown ,Dinakaran ,
× RELATED தென்ஆப்ரிக்காவுடன் முதல் டி 20 போட்டி: 28...