×

3வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அபார வெற்றி: 3-0 என தெ.ஆப்ரிக்கா ஒயிட்வாஷ்

கிங்ஸ்டன்: தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட டி.20 தொடரில் ஆடியது. இதில் முதல் 2 போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி இன்று அதிகாலை நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்க அணியில் டிகாக் 19, ரீசா ஹென்ட்ரிக்ஸ் 6, ரியான் ரிக்கல்டன் 18 ரன்னில் வெளியேற அதிகபட்சமாக கேப்டன் வான் டெர் டுசென் 51 (31 பந்து, ஒரு பவுண்டரி,5 சிக்சர்) வியான் முல்டர்36 ரன் அடித்தனர்.

20 ஓவரில் அந்த அணி7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன் எடுத்தது. வெ.இண்டீஸ் பவுலிங்கில் ஓபேட் மெக்காய் 3, ஷமர் ஜோசப், குடாகேஷ் மோதி தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணியில் கேப்டன் பிராண்டன் கிங் 44 (28பந்து, 2பவுண்டரி,4 சிக்சர்), ஜான்சன் சார்லஸ் 26 பந்தில், 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 69 ரன் எடுத்து அவுட் ஆகினர். 13.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன் எடுத்த வெஸ்ட்இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கைல் மேயர்ஸ் 36, அலிக் அத்தானாஸ் 6 ரன்னில் களத்தில் இருந்தனர். ஜான்சன் சார்லஸ் ஆட்டநாயகன் விருதும், 3 போட்டியில் 8 விக்கெட் எடுத்த குடாகேஷ் மோதி தொடர் நாயகன் விருதும் பெற்றனர். இந்த வெற்றி மூலம் 3-0 என வெஸ்ட்இண்டீஸ் தொடரை கைப்பற்றி தெ.ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது.

The post 3வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அபார வெற்றி: 3-0 என தெ.ஆப்ரிக்கா ஒயிட்வாஷ் appeared first on Dinakaran.

Tags : West Indies ,South Africa ,Kingston ,West ,Indies ,T20 ,Africa ,Dinakaran ,
× RELATED சூப்பர்-8 சுற்று இன்று தொடக்கம்: தென்...