×

பச்சை பீன்ஸ் உசிலி

தேவையானவை

பீன்ஸ் – 1/2 கிலோ
கடலைப்பருப்பு – 150 கிராம்
காய்ந்த மிளகாய் – 2
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
தனி மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

கடலைப் பருப்பை அலசி. அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவிடவும். பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், தனி மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கொதி வந்ததும் பீன்ஸை சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். ஒரு மிக்ஸி ஜாரில் கடலைப்பருப்பு, 2 காய்ந்த மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து சிறிது நேரம் கிளறிக் கொள்ளவும். இதனை சிறிது நேரம் மூடி போட்டு, வேக விட்டப் பிறகு, சிறிது நேரம் ஆற விட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வேக வைத்த பீன்ஸ் மற்றும் அரைத்து வைத்துள்ள கடலைப் பருப்பையும் சேர்த்து சிறிது நேரம் கிளறி விடவும். இவை சிறிது உதிரி உதிரியாக வந்த பிறகு அடுப்பை அணைத்து எடுத்தால் சுவையான பீன்ஸ் உசிலி தயார்.

The post பச்சை பீன்ஸ் உசிலி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...