×

சென்னை எண்ணூர் அருகே எண்ணெய் கசிவை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சிபிசிஎல் நிறுவனம் விளக்கம்

சென்னை: எண்ணூர் அருகே கடலில் கலந்த எண்ணெய் கசிவு தொடர்பாக சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்) விளக்கம் அளித்து கூறியதாவது: மிக்ஜம் புயல் காரணமாக 36 மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் சுத்திகரிப்பு நிலையத்தில் வெள்ளம் ஏற்பட்டது. வரலாறு காணாத வெள்ளத்தால் சுத்திகரிப்பு நிலையத்தின் அசுத்தமான கழிவுநீர் அமைப்புடன் வெள்ள நீர் கலந்தது. வெள்ளத்தால் சுத்திகரிப்பு ஆலை குழாய்களில் கசிவு இல்லை.மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தல்படி எண்ணெய்யை அகற்ற உரிய கருவிகளை பயன்படுத்துகிறோம்.

மாநில அரசின் வழிகாட்டுதல்படி பணிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். கடலில் எண்ணெய் பரவுவதை தடுக்க மிதவைகள் பயன்படுத்தப்படுகின்றன.நிபுணத்துவம் பெற்ற நிறுவனத்துடன் சேர்ந்து எண்ணெய் கசிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. எண்ணெய் கசிவு அகற்றும் பணியில் 60 படகுகளுடன் 125 பேர் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்யும் பணி 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு கூறியுள்ளது.

The post சென்னை எண்ணூர் அருகே எண்ணெய் கசிவை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சிபிசிஎல் நிறுவனம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : CBCL ,Ennore, Chennai ,Chennai ,Chennai Petroleum Corporation ,Ennore ,Dinakaran ,
× RELATED நாகை சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப்...