×

திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் கள்ளச்சாராய வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், கள்ளச்சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நேற்று ெபாது ஏலத்தில் விடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், கள்ளச்சாராய வழக்குகள், எரி சாராய கடத்தல் போன்றவற்றில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் அனைத்தும், 6 மாதங்களுக்கு ஒருமுறை பொது ஏலத்தில் விடுவது வழக்கம்.

அதன்படி, சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 95 இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட மொத்தம் 100 வாகனங்கள் நேற்று பொது ஏலத்தில் விடப்பட்
டது. திருவண்ணாமலை எஸ்பி அலுவலக ஆயுதப்படை வளாக மைதானத்தில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில், கலால் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் முன்னிலையில் வாகன ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் பங்கேற்பவர்களிடம் ₹100 நுழைவு கட்டணமும், ₹2 ஆயிரம் முன்பணமாகவும் வசூலிக்கப்பட்டு ஏற்கனவே ரசீது வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, ரசீது பெற்றிருந்தவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஏலத்தில் பங்கேற்றனர்.

அதில், பெரும்பாலானோர் இருசக்கர வாகன மெக்கானிக்குகளையும் அழைத்து வந்திருந்தனர்.இதில் 87 வாகனங்கள் ஏலம் எடுத்ததில் ₹28 லட்சம் வசூலிக்கப்பட்டது.
ஏலத்தில் எடுக்கப்பட்ட வாகனங்கள், முறைப்படி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மறுபதிவு செய்ய தேவையான ஆவணங்கள் உடனடியாக வழங்கப்பட்டது.

The post திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் கள்ளச்சாராய வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai SP ,Tiruvannamalai ,Debad ,Tiruvannamalai District ,Kallacharaya ,Tiruvannamalai SP Office ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 730 பள்ளி வாகனங்களின் தரம் தணிக்கை