×

நிவாரண பணிகளை குறைசொல்வது, பணியாற்றிய பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவதற்கு சமம்: சபாநாயகர் அப்பாவு கண்டனம்

கோவை: வெள்ள நிவாரண பணிகளை குறைசொல்வது, பணியாற்றிய பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றது என்று சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலைக்கல்லூரியில் இன்று கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். இதற்காக கோவை வந்த அப்பாவு, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கலைஞர் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் இன்று பள்ளி, கல்லூரி என 2 இடங்களில் கருத்தரங்கம் நடக்கிறது.

சென்னையில் நடந்த மழை வெள்ள நிவாரண பணிகளை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். நேற்று பாதிக்கப்பட்ட இடங்களை மத்தியக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளனர். இதனால் குறை சொல்பவர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும். வெள்ளம் பாதித்த மக்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகள் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post நிவாரண பணிகளை குறைசொல்வது, பணியாற்றிய பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவதற்கு சமம்: சபாநாயகர் அப்பாவு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Speaker ,Gov. ,Dinakaran ,
× RELATED ராகுல், ஓம்பிர்லா தொகுதிகளில் இன்று...