×

காசா போர் நிறுத்த செய்ய கோரும் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு: நிபந்தனையின்றி அனைத்து பிணை கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்கவும் வலியுறுத்தல்!!

நியூயார்க்: காசாவில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. காசா நகர் மீது கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்து வருகிறது. காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது. இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் காசா மீதான இஸ்ரேல் போரில் அங்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் அதிகமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆவர். இஸ்ரேலில் தாக்குதலில் வடக்கு காசா முற்றிலும் சீர்குலைந்ததுள்ளது. இதற்கிடையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியிலும், நோய் தொற்று ஏற்படும் அபாயத்திலும் இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்திருந்தன.

இந்நிலையில்தான் தற்போது ஐ.நா.வில் உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் தேவை என மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் உடனடியாக நிபந்தனையின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. அர்ஜென்டினா, உக்ரைன், ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

The post காசா போர் நிறுத்த செய்ய கோரும் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு: நிபந்தனையின்றி அனைத்து பிணை கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்கவும் வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : UN ,Gaza war ,India ,Hamas ,New York ,Gaza ,General Assembly ,Dinakaran ,
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...