×

பஸ்சில் இருந்து விழுந்த மூதாட்டி படுகாயம்

 

தொண்டாமுத்தூர்,டிச.13: கோவை அருகே தென்னமநல்லூர் காந்தி காலனி சேர்ந்தவர் பழனியம்மாள் (66). இவர் நேற்று தனியார் பேருந்தில் பேரூர் செட்டிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கும்போது பஸ் புறப்பட்டதால் கீழே விழுந்து தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

உடனடியாக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு பழனியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தனியார் பஸ் டிரைவர் மாதம்பட்டியை சேர்ந்த பூபதி (29) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பஸ்சில் இருந்து விழுந்த மூதாட்டி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Thondamuthur ,Palaniammal ,Thannamanallur Gandhi Colony ,Coimbatore ,Dinakaran ,
× RELATED ‘எக்ஸ்கியூஸ் மீ… சாப்பிட என்ன...