×

விலையில்லா சைக்கிள் வழங்கல் பூதப்பாடியில் ரூ.3.26 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள் ஏலம்

 

பவானி, டிச.13: அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் வேளாண்மை விளைபொருட்கள் ரூ.3.26 லட்சத்துக்கு நேற்று ஏலம் போனது. இங்கு, 2,138 தேங்காய்கள் விற்பனைக்கு வந்ததில், சிறிய தேங்காய் ரூ.5.19 முதல் பெரிய தேங்காய் ரூ.13.87 வரையில் ரூ.17,066-க்கும், 16 மூட்டைகள் தேங்காய் பருப்பு, குவிண்டால் ரூ.7,289 முதல் ரூ.8,629 வரையில் ரூ.32,750-க்கும், 68 மூட்டைகள் நிலக்கடலை, ஒரு குவிண்டால் ரூ.8,317 முதல் ரூ.8,816 வரையில் ரூ.1,92,648க்கு விற்பனையானது. 11 மூட்டைகள் எள், குவிண்டால் ரூ.13,869 முதல் ரூ.16,169 வரையில் ரூ.84,533-க்கு விற்பனையானது. மொத்தம் 95 மூட்டைகளில், 44.99 குவிண்டால் எடையுள்ள வேளாண் விளைபொருட்கள் ரூ.3,26,997-க்கு விற்பனையானது. இதில், 63 விவசாயிகள் பயனடைந்தனர்.

The post விலையில்லா சைக்கிள் வழங்கல் பூதப்பாடியில் ரூ.3.26 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Bhootapadi Bhavani ,Bhootapadi ,Ammapet ,Dinakaran ,
× RELATED அம்மாபேட்டை பகுதியில் மும்முனை...