×

பொன்மனையில் பொதுமக்கள் அமைத்த பயணிகள் நிழலகம்

குலசேகரம், டிச.13: பொன்மனை சந்திப்பு மலைவாழ் மக்கள், மலையோர மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியாகும். 12 சிவாலயங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற பொன்மனை மகாதேவர் கோயில் இங்கு உள்ளது. இதனால் பக்தர்கள் அதிகம் வருகை தருகின்றனர். இங்கு வரும் பஸ் பயணிகள் வசதிக்காக இங்குள்ள பொதுமக்கள் சேர்ந்து பொன்மனை கிராமீண கிரந்த சாலை பகுதியில் ஜானகி பிள்ளை நினைவு பயணிகள் நிழலகத்தை அமைத்தனர். இந்த பயணிகள் நிழலகத்தை அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பொன்மனை கிராமீண கிரந்த சாலை தலைவர் ரமேஷ் குமார் தலைமை வகித்தார். மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜாண்சன் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற பேராசிரியர் சிஎம்கே தம்பி வாழ்த்துரை வழங்கினார். இதில் கிராமீண கிரந்த சாலை நிர்வாகிகள் வல்சகுமார், ஐயப்பன், கட்டிட குழு நிர்வாகிகள் சாந்தி, விஜயகுமார், ராஜு, ஸ்ரீகுமார், ஜெயசேகரன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பெர்ஜின், பொன்மனை பேரூர் திமுக செயலாளர் சேம் பெனட் சதீஷ், கவுன்சிலர் சுதா, திமுக நிர்வாகிகள் ஜெஎம்ஆர், கனகராஜ், தேவராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பொன்மனையில் பொதுமக்கள் அமைத்த பயணிகள் நிழலகம் appeared first on Dinakaran.

Tags : Ponmana ,Kulasekaram ,Ponmanai Junction ,
× RELATED குலசேகரம் அருகே காதல் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை