×

லண்டனில் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு: இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் வியப்பு

லண்டன்: ஆழ்கடலுக்குப் பயணம் செய்வது ஆராய்ச்சியாளர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. அந்த பயணங்களின் போது, ​​மனித குலத்தை வியப்பில் ஆழ்த்தக் கூடிய பழங்கால புதைபடிவங்களை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து வருகின்றனர்.

அவ்வாறு திகிலூட்டும் மற்றும் ஆச்சரியமளிக்கும் கடல் ஊர்வன அரக்கனின் மண்டை ஓட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஊர்வன புதைபடிவமானது, தெற்கு இங்கிலாந்தின் பாரம்பரிய ஜுராசிக் கடற்கரைக்கு அருகிலுள்ள கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ‘டைனோசர்’கள் வாழ்ந்த காலத்தில், கடல்வாழ் ஊர்வன வகையை சேர்ந்த 2 மீட்டர் நீளமுள்ள மண்டை ஓட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்களின் மண்டை ஓட்டில் இருந்து கூர்மையான பற்கள் வெளியே ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

இந்த ஊர்வனமானது ‘பைலோசர்’ வகையை சேர்ந்தது என்கின்றனர். இந்த ஊர்வன விலங்கில் 130 கூர்மையான பற்களை கொண்டது என்றும், அவற்றின் முக்கிய உணவு டால்பின்கள் மற்றும் சுறாக்கள் போன்ற பெரிய உயிரினங்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஊர்வன வகுப்பைச் சேர்ந்த மற்ற ஊர்வனவற்றின் புதைபடிவங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதாகவும், கண்டுபிடிக்கப்பட்ட ஊர்வனத்தின் மண்டை ஓடுகள் குறித்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

The post லண்டனில் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு: இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் வியப்பு appeared first on Dinakaran.

Tags : London ,UK ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை