×

செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி, ‘திராவிட மாடல்’ அரசு வரலாறு படைத்ததை போல், இந்த செஸ் போட்டியையும் வெல்லச் செய்வோம் : அமைச்சர் உதயநிதி

சென்னை : 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் நடத்தி, நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு புதிய வரலாறு படைத்ததை போல், இந்த செஸ் போட்டியையும் வெல்லச் செய்வோம் என்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி வரும் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற உள்ளது.

தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம் ஆகும். சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிப்பவர் ரூ.10 லட்சத்தையும், 3-வது இடத்தை பிடிப்பவர்கள் ரூ.8 லட்சத்தையும் பெறுவார்கள்.இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையை புதிய பரிணாமங்களில் விரிவடையச் செய்வதற்கான நம்முடைய தொடர் முயற்சிகளில் ஒன்றாக “சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2023” போட்டி நடைபெற இருக்கிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஏற்பாட்டில் சென்னையில் வரும் 15 முதல் 21ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான புகழ்பெற்ற வீரர் – வீராங்கனையர் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் நடத்தி, நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு புதிய வரலாறு படைத்ததை போல், இந்த செஸ் போட்டியையும் வெல்லச் செய்வோம்”என்று குறிப்பிட்டுள்ளார்.

The post செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி, ‘திராவிட மாடல்’ அரசு வரலாறு படைத்ததை போல், இந்த செஸ் போட்டியையும் வெல்லச் செய்வோம் : அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.

Tags : Dravidian model' government ,Chess Olympiad ,Minister ,Udayanidhi ,Chennai ,44th Chess Olympiad ,Dravidian Model ,government ,
× RELATED இந்தியாவில் தமிழ்நாடுதான் தலை சிறந்த மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!