×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க விலக்கு அளித்தது ஐகோர்ட்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்தது

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னைத் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளரான மேத்யூ சாமுவேல் மற்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி, கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக, மாஸ்டர் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்தது.

இதனை அடுத்து இந்த வழக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான தன்னால் மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது. எனவே வழக்கறிஞர் ஆணையரை நியமித்து தனது வீட்டிலேயே வைத்து சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி, எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து பழனிசாமியின் சாட்சியத்தை பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக பழனிசாமிக்கு விலக்கு அளித்தும், வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க விலக்கு அளித்தனர். மேலும் சாட்சியப்பதிவை ஒரு மாதத்தில் முடிக்க வழக்கறிஞர் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க விலக்கு அளித்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Court ,Edappadi Palaniswami ,Kodanad ,Chennai ,Chennai High Court ,Edappadi Palanisamy ,
× RELATED பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து...