×

சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் எர்ரே பள்ளி கிராமத்தில் தார் சாலை அமைக்க வேண்டும்

*பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

*மொத்தம் 232 மனுக்கள் பெறப்பட்டது

சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் எர்ரே பள்ளி கிராமத்தில் தார் சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் பொதுமக்களிடம் கோரிக்ைக மனு அளித்தனர். சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக கலெக்டரிடம் வழங்கினார்கள்.

அதில், வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, வனத்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மின்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்னைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் என மொத்தம் 232 மனுக்கள் அளிக்கப்பட்டது. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மோகன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் சித்தூர் மாவட்டம், ஐராலா மண்டலம், எர்ரே பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகளில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாசித்து வருகிறார்கள். எங்கள் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான தார் சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். தற்போது மண் சாலை மட்டுமே உள்ளதால் மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மண் சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும் என பலமுறை மண்டல வருவாய் துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே எங்கள் கிராமத்திற்கு உடனடியாக தார் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

குடிபாலா மண்டலம், நரஹரி பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அளித்த மனுவில் கூறுகையில், ‘நான் மேற்கண்ட கிராமத்தில் விசித்து வருகிறேன். எங்கள் பகுதியில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்திற்கு குடிநீர் ஆழ்துளை கிணறு மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கிராமத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு ஏற்படுவதால் உரிய நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத ஆவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே எங்கள் பகுதியில் நீர் தேக்க தொட்டியை அமைத்து, அதன் மூலம் குடிநீர் தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ கூறினார். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மனுதாரர்களுக்கு உறுதி அளித்தார். இதில், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் எர்ரே பள்ளி கிராமத்தில் தார் சாலை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Chittoor Collector's Office ,Dar Road ,Erre School Village ,Chittoor ,Dinakaran ,
× RELATED தோகைமலை அருகே தார் சாலையை...