×

மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்த இணை வழி கல்வி வாணொலி

 

அரியலூர்,டிச.12: அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கூட்டரங்கில், மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்கான இணைய வழி கல்வி வானொலி உருவாக்கப்பட்டது. இதற்காக நேற்று நடைபெற்ற தொடக்க நிகழச்சிக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மொழியரசி தலைமை கல்வி வானொலியை www.kalviradio.com தொடக்கி வைத்து பேசினார். விரிவுரையாளர்கள் மணமலர், பாலசுப்பிரமணியன், ராஜா, கென்னடி, விஜயகுமார், ராஜேந்திரன், மாலா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் தனது பேச்சாற்றலை வளர்த்து கொள்ள இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்கு ஆசிரியர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தன்னார்வ ஒருங்கிணைப்பாளர் பட்டதாரி ஆசிரியர் ஜெயலெட்சுமி, இணையவழி கல்வி வானொலி குறித்தும், தன்னார்வலர்கள் வழிகாட்டுதலின் பேரில் 32,000 ஆடியோக்கள் வானொலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னனதாக விரிவுரையாளர் மாரிமுத்து வரவேற்றார்.

The post மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்த இணை வழி கல்வி வாணொலி appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,District Teacher Education and Training Institute Conference ,Keezapavuur, ,
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் ரூ.50ஆயிரம் திருட்டு