×

சமகவுடன் பாஜ கூட்டணி ? நயினார் நாகேந்திரன் விளக்கம்

நெல்லை: நெல்லையில் பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ.வுடன் சமக கூட்டணி வைத்து போட்டியிடப் போவதாக சிலர் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. கூட்டணி குறித்து டெல்லி நாடாளுமன்ற குழுதான் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ. வெற்றி பெறும். காங்கிரஸ் இந்த நாட்டுக்கு அநீதி இழைத்துள்ளது. சென்னையில் மக்கள் நெருக்கடியை குறைக்க திருச்சியை 2வது தலைநகராக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கொங்கு மண்டல மக்களும், தென்மாவட்டத்தை சேர்ந்தவர்களும் தலைநகரத்திற்கு எளிதாக சென்று வர வாய்ப்பு கிடைக்கும். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவை ஒன்றிய அரசு ரத்து செய்ததை செல்லும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரே சட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது பெரும்பான்மையான மக்களின் விருப்பமாகும். அதை ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து பிரிவை நீக்கியதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பெரும்பங்கு உண்டு. கவர்னர் பதவி தேவையில்லை என்று சில மாநிலங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post சமகவுடன் பாஜ கூட்டணி ? நயினார் நாகேந்திரன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Samagava ,Nayanar Nagendran ,Nellai ,BJP Legislative Party ,Samaga ,Dinakaran ,
× RELATED தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பறிமுதல்...