×

பாகிஸ்தான் எல்லையில் 95 டிரோன்கள் ஓராண்டில் பறிமுதல்: பிஎஸ்எப் சிறப்பு இயக்குநர் தகவல்

சண்டிகர்: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள காஷ்மீர், ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லை நிலைகளை பாதுகாக்கும் பொறுப்பு எல்லை பாதுகாப்பு படையின் மேற்கு கமாண்ட் பிரிவுக்கு உள்ளது. இதன் சிறப்பு இயக்குநர் யோகேஷ் பகதூர் காருனியா பஞ்சாபில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், ‘’பாதிப்பு மதிப்பீடு, ஊடுருவல் சோதனை மற்றும் இணைய பாதுகாப்பு பாதிப்புகளை கண்டறிவதுடன், ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தலை தடுக்க வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது,’’ என்று தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், ‘’போதைப்பொருள் கடத்தலை தடுப்பது என்பது பஞ்சாபிலும் ராஜஸ்தான் மற்றும் ஜம்முவின் சில பகுதிகளிலும் பெரும் சவாலாக உள்ளது. கடந்த 2-3 ஆண்டுகளாக எல்லை கடந்து டிரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்துவது அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இந்தாண்டில் இதுவரை மட்டும் 95 டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பஞ்சாபில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,’’ என்று கூறினார்.

The post பாகிஸ்தான் எல்லையில் 95 டிரோன்கள் ஓராண்டில் பறிமுதல்: பிஎஸ்எப் சிறப்பு இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,BSF ,Chandigarh ,Kashmir ,Jammu ,Punjab ,Rajasthan ,Gujarat ,India-Pakistan ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...