×

டாஸ்மாக் பார்கள் ஏலத்தை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவிக்கும் நிலையில், டாஸ்மாக் பார்கள் ஏலத்தை ஒத்தி வைக்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தான் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள். தமிழ்நாட்டில் உடனடியாக ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். எனவே, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் நடைபெற உள்ள டாஸ்மாக் பார்களின் ஏலத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post டாஸ்மாக் பார்கள் ஏலத்தை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Tasmac Bars ,CHENNAI ,Pamaka… ,Dinakaran ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்