×

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்: எம்எல்ஏ வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் பாதிக்கப்பட்ட, 570 மக்களுக்கு நிவாரண உதவிகளை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்.
மிக்ஜாம் புயல் கடந்த வாரம் கன மழையுடன் கும்மிடிப்பூண்டி, எளாவூர், மாதர்பாக்கம், மாநெல்லூர், பூவாலம்பேடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கன மழை காற்றுடன் வீசியது. மேலும், கும்மிடிப்பூண்டி பேரூராட்சியை ஒட்டி உள்ள சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன், கழிவுநீர் கலந்தது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் மின் மோட்டார்கள் மூலம் பொக்லைன் இயந்திரங்களை வைத்தும் அதனை சுத்தம் செய்தனர். பின்னர், அந்த பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடர் தெளித்தனர். அப்போது மேற்கண்ட பகுதிகளை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அந்த பணிகளை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, மின்வாரிய ஊழியர்கள் பல தெருக்களில் புயல் மழையால் விழுந்த மின் கம்பங்களை சரி செய்தனர்.

இதனை தொடர்ந்து, இயல்பு நிலைக்கு சென்றடைந்த நிலையில், ஆதிதிராவிடர் மக்கள் மற்றும் பழங்குடியினர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை கண்டறிந்து நிவாரண பணிகளை வழங்குவதற்காக நேற்று டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ அந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, நேற்று காலை கோரிமேடு, கங்கன் தொட்டி, ரயில்வே ஸ்டேஷன் கரிமேடு ஆகிய பகுதிகளில் மட்டும் சுமார் 570 பயனாளிகளுக்கு 5 கிலோ அரிசி, அரை கிலோ எண்ணெய், அரை கிலோ பருப்பு ஆகிய நிவாரண பொருட்களை வழங்கினார்.
இவருடன் பேரூர் திமுக செயலாளர் அறிவழகன், மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தமிழரசு துணைத் தலைவர் கேசவன், முன்னாள் தலைவர் பாஸ்கர், வார்டு உறுப்பினர்கள் காளிதாஸ், இஸ்மாயில், குப்பன், கரீம், அர்ஜுனன், பேரூர் நிர்வாகிகள் ரமேஷ், ராஜா,கோபி, ஐயூப்கான், அக்கீம், இளைஞர் அணி அமைப்பாளர் சாண்டில்யன், சிவா, தசரதன், ஆகியோர் உடன் இருந்தனர்.

 

The post மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Mikjam ,MLA ,Kummidipundi ,Kummidipundi district ,J. Govindarajan ,
× RELATED கும்மிடிப்பூண்டி சிப்காட் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து