×

மானாமதுரை கண்மாயில் கொள்ளவை தாண்டி நீர் நிரப்புவதாக புகார்; 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.. விவசாயிகள் குமுறல்..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கண்மாயில் கொள்ளளவை தாண்டி தண்ணீரை நிரப்புவதால் அருகே உள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்டவை சேதமாகிவிட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கண்மாயை நம்பி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின் போது வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம், மாரநாடு கண்மாய் நிரப்படுவது வழக்கம்.

அதன்படி கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் தேவைக்கு அதிகமாக அந்த கண்மாயில் தண்ணீர் நிரப்பியதால் பிச்சைப்பிள்ளையேந்தல், மேட்டுமடை, சலிப்பனோடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மீன் வளர்ப்பதற்காக அளவுக்கு அதிகமாக கண்மாயில் தண்ணீரை நிரப்பி வருவதாகவும், இது தொடர்பாக வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே கண்மாய் நிரம்பிய பின் மதகுகளை அடைத்து பயனுள்ள முறையில் நீரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

The post மானாமதுரை கண்மாயில் கொள்ளவை தாண்டி நீர் நிரப்புவதாக புகார்; 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.. விவசாயிகள் குமுறல்..!! appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Kanmaayil Kollu ,Sivagangai ,District ,Sivagangai District ,Dinakaran ,
× RELATED மானாமதுரை அருகே பொக்லைன் மீது அரசுப்...