×

முண்டாசு கவி பாரதியாரை இந்நாள் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் போற்றி கொண்டாடுவோம்: டிடிவி தினகரன்

சென்னை: முண்டாசு கவி பாரதியாரை இந்நாள் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் போற்றி கொண்டாடுவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, பெரிதினும் பெரிது கேட்கும் ஆர்வம் கொண்டிருப்பதும், வையத்தலைமை கொள்ளும் மானுட பண்பை பெற்றிருப்பதும் வாழ்க்கையின் பெரும் பயன்கள் என்றுரைத்து புரட்சிகரமான கவிதைகள் மூலம் மக்கள் மனதில் தமிழ் உணர்வோடு விடுதலை உணர்வையும் விதைத்த சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று.

பெண்களின் உரிமைக்கும் கல்விக்கும் முக்கியத்துவம் அளித்து முதன்முதலாக குரல் எழுப்பியதோடு, அரசியல் களம், நாட்டின் விடுதலையில் தொலைநோக்கு சிந்தனை கொண்டிருந்த முண்டாசு கவி பாரதியாரை இந்நாள் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் போற்றி கொண்டாடுவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post முண்டாசு கவி பாரதியாரை இந்நாள் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் போற்றி கொண்டாடுவோம்: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Tags : Mundasu Kavi Bharatiyar ,DTV Dhinakaran ,Chennai ,Mundasu Kavi ,Bharatiyar ,DTV Dinakaran ,
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...