×

முள்வேலியில் சிக்கிய முதியவர் சாவு

 

தேவாரம், டிச. 11: கோம்பை காந்தி நகரை சேர்ந்தவர் பாண்டி (60), இவர் தனியாக வசித்து வந்தார். மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தினமும் குடித்துவிட்டு, வீட்டிற்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த அவர், வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள முள்வேலியில் விழுந்தார்.

இதில் உடல் முழுவதும் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த அவரது உறவினர்கள், பாண்டியை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

The post முள்வேலியில் சிக்கிய முதியவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Devaram ,Bandi ,Gombai Gandhi ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...