×

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

 

சேலம், டிச.11: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி, சேலத்தில் நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாநில தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடந்த இப்பேரணியை வக்கீல் செல்வகீதன், பாரதி உரிமைகள் அறக்கட்டளை தலைவர் பூபதி துவங்கி வைத்தனர். இதில், சேலம் மாவட்ட தலைவர் குமரேசன், துணைத்தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : with disabilities ,Salem ,World Day of Persons with Disabilities ,Tamilnadu Federation of Disabled Persons' Right to Life ,Disabled Persons Awareness Rally ,Dinakaran ,
× RELATED நலத்திட்டங்கள் குறித்து...