×

திருத்தணி அருகே பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

 

திருத்தணி, டிச. 11: திருத்தணி அடுத்த பூனிமாங்காடு அடுத்த வெங்கடாபுரம் கிராமம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் குமார். இவரது மகன் காமராஜ்(23). பட்டதாரியான இவர் நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டின் அருகே பூச்சி மருந்து குடித்துவிட்டார். இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் செய்து குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணம் ஏதேனும் உண்டா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருத்தணி அருகே பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Kumar ,Venkadapuram village ,Poonimangada ,Tiruptani ,
× RELATED கனகம்மாசத்திரம் சாலையில் வேரோடு...