×

ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இந்தியா வருகை: வௌியுறவு அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இந்த வாரம் இந்தியா வரவுள்ளதாக இந்திய வௌியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வௌியுறவு அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் அழைப்பை ஏற்று ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் வரும் 16ம் தேதி இந்தியா வரவுள்ளார். அவருடன் ஓமன் நாட்டின் அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் சிலரும் இந்தியா வருகின்றனர். ஓமன் சுல்தானை குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி வரவேற்பார். பின்னர் இருவரும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர். இதைதொடர்ந்து அளிக்கப்படும் மதிய விருந்தில் ஓமன் சுல்தான் பங்கேற்பார்” என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு இடையே பாலஸ்தீன நட்பு நாடான ஓமன் சுல்தான் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.

The post ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இந்தியா வருகை: வௌியுறவு அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Sultan Haitham bin Tariq ,Oman ,India ,Ministry of External Affairs ,New Delhi ,Indian Ministry of External Affairs ,Dinakaran ,
× RELATED துபாயைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை!