×

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மின்டன் இந்திய ஜோடிக்கு தங்கம்

கவுகாத்தி: யோனக்ஸ் சூப்பர் 100 கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா – தனிஷா கிராஸ்டோ ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இறுதிப் போட்டியில் சீன தைபேவின் சங் ஷுவோ யுன் – யு சியென் ஹுய் ஜோடியுடன் நேற்று மோதிய இந்திய இணை 21-13, 21-19 என்ற நேர் செட்களில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. இப்போட்டி 40 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. நடப்பு சீசனில் அஷ்வினி – தனிஷா வென்ற 2வது சாம்பியன் பட்டம் இது. முன்னதாக, அபுதாபி மாஸ்டர்ஸ் சூப்பர் 100 தொடரில் இவர்கள் பட்டம் வென்றிருந்தனர். கடந்த வாரம் லக்னோவில் நடந்த சையத் மோடி சூப்பர் 300 பேட்மின்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அஷ்வினி – தனிஷா இணை, பைனலில் ஜப்பானின் இவனகா – நகானிஷி ஜோடியிடம் போராடி தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

The post கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மின்டன் இந்திய ஜோடிக்கு தங்கம் appeared first on Dinakaran.

Tags : Guwahati Masters Badminton ,Guwahati ,Ashwini Ponnappa ,Yonex Super 100 Guwahati Masters Badminton Series ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தலைவர் பற்றி அவதூறு அறிக்கை;...