×

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்திரசேகரராவை சந்தித்து நலம் விசாரித்த தெலங்கானா முதல்வர்

திருமலை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவை தெலங்கானா முதல்வர் ரேவந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் கஜ்வேலில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த நிலையில் குளியலறையில் தவறி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு குடும்பத்தினர் ஐதராபாத் யசோதா மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவருக்கு இடது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, சந்திரசேகரராவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

இந்நிலையில், தெலங்கானாவின் முதல்வர் ரேவந்த் நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவரின் உடல் நலம் குறித்து பிஆர்எஸ் கட்சி செயல் தலைவரும், சந்திரசேகரராவ் மகனுமான கே.டி.ராமாராவிடம் கேட்டறிந்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் ஹரிஷ் ராவ், முதல்வருடன் அமைச்சர் சீதக்கா, ஷபீர் அலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்திரசேகரராவை சந்தித்து நலம் விசாரித்த தெலங்கானா முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Chief Minister ,Chandrasekharara ,Tirumala ,Revanth ,
× RELATED ரசிகர்களை கட்டுபடுத்தி வைக்க...