×

மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ரூ.12,000 வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.12,000 வழங்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை :
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது. மழை வெள்ளம் சாக்கடையுடன் கலந்து, பொதுமக்கள் அவர்களுடைய வீடுகளை விட்டும், குடியிருப்பு பகுதிகளை விட்டும் வெளியேற முடியாத நிலையில், கடந்த ஒருவாரமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. இன்னும் சகஜ நிலைக்கு திரும்ப ஒருவாரம் ஆகும். 2 வாரம் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில், 15 நாள் வருமானத்தையும், உடைமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். எனவே, ரூ.6,000த்தை உயர்த்தி ரூ.12,000 எந்த நிபந்தனையுமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும்.

சென்னை மணலி, மணலிப்புதூர், எர்ணாவூர் பகுதிகளில் மழை நீருடன் ஆலைகளின் ஆயில் கழிவுகளால் சுமார் 5,000 குடியிருப்புகளில் மக்கள் வாழ முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு கூடுதலாக ரூ.25,000 நிவாரணம் வழங்குவதுடன், எண்ணெய் கழிவுகளை தகுந்த தொழில்நுட்ப உதவியுடன் தூய்மைப்படுத்த வேண்டும். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 2,000 ஏக்கருக்கு மேல் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களிலும், நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதையும் ஆய்வு செய்து ஏக்கருக்கு ரூ.17,000 வழங்க வேண்டும்.

 

The post மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ரூ.12,000 வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Govt ,Migjam ,Edappadi Palaniswami ,Chennai ,Mijam ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்