×

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வங்கி கடன் தவணை செலுத்த அவகாசத்துக்கு நடவடிக்கை: எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகோள்

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரூ.6000 நிவாரண தொகை அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது. அரசு நிவாரண உதவி தொகையை ரூ.15 ஆயிரமாகவும், மழைநீரால் முழுவதும் பாதிக்கப்பட்ட தரைத்தள வீடுகளுக்கு ரூ.25 ஆயிரமாகவும் நிவாரண உதவி தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும். ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, ரேஷன் அட்டை இல்லாத அனைத்து குடும்பத்துக்கும் நிவாரண உதவி தொகையை வழங்க வேண்டும்.

மேலும், வங்கிகள், நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தவணை தொகையை செலுத்த 3 மாத அவகாசத்தையும் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். மழை வெள்ளத்தால் வியாபார நிறுவனங்கள், சிறு-குறு தொழில் நிறுவனங்களும் மிகப்பெரும் அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளன. அவர்களுக்கும் ரூ.1 லட்சம் மானியத்துடன் கடன் உதவிகளை அரசு வழங்கிட வேண்டும்.

 

The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வங்கி கடன் தவணை செலுத்த அவகாசத்துக்கு நடவடிக்கை: எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : STBI ,Chennai ,STPI ,president ,Nellie Mubarak ,Mijam ,Dinakaran ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்