×

முதலமைச்சர் மழை வெள்ள பாதிப்பு நிதி 1 வாரத்தில் டோக்கன் கொடுக்கப்பட்டு வழங்கப்படும்: அமைச்சர் உதயநிதி பேட்டி

 


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக்கழகத்தின் சார்பில், குன்றத்தூர் வடக்கு ஒன்றியம், மெளலிவாக்கம் ஊராட்சி, கோவிந்தராஜ் நகரில் அண்மையில் பெய்த கன மழையால் பாதிப்புகளை எதிர்கொண்ட, 600 பொதுமக்களுக்கு இன்றைய தினம் அரிசி மளிகை பொருட்கள் தொகுப்பு ஆகியவற்றை இன்று காலை வழங்கினார்கள்.

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி, மெளலிவாக்கம் ஊராட்சியில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பினை தொடர்ந்து, அங்குள்ள பஜனைகோவில் தெரு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு காஞ்சி வடக்கு மாவட்டக்கழகம் சார்பில், உணவு மற்றும் மளிகை பொருட்களை நிவாரண உதவியாக இன்று வழங்கினார்கள். மேலும், அப்பகுதி மக்களுக்கு எப்போதும் துணை நிற்போம் என்று அமைச்சர் உதயநிதி உறுதியளித்தார்.

முதலமைச்சர் மழை வெள்ள பாதிப்பு நிதி 1 வாரத்தில் டோக்கன் கொடுக்கப்பட்டு நிவாரண தொகை ரூ.6000 வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி பேட்டி அளித்துள்ளார். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் திருப்புகழ் ஐஏஎஸ் அறிவுறுத்தலின் அடிப்படையில் அமைக்கபட்டதால் தான், பெருமளவு மழைநீர் தேங்கவில்லை.

பெரும்பாளான பகுதிகளில் மின்விநியோகம் சீரடைந்துள்ளது, இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். எதிர்கட்சிகள் வெள்ளை அறிக்கை குறித்து சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள், நாம் நமது வேலையை பார்ப்போம். தற்போது சென்னை உள்ள நிலைமையில், கார் பந்தயம் வேண்டாம் என ஒத்தி வைத்துள்ளோம். கார் பந்தயம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்”

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர் தா.மோ அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

The post முதலமைச்சர் மழை வெள்ள பாதிப்பு நிதி 1 வாரத்தில் டோக்கன் கொடுக்கப்பட்டு வழங்கப்படும்: அமைச்சர் உதயநிதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram North District Corporation ,Kunrathur Northern Union ,Melaliwakkam ,Oratchi ,Govindaraj ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...