×

சென்னை சைதாப்பேட்டையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : சென்னை சைதாப்பேட்டையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சைதை 140 வது வட்டத்தில் M G M மருத்துவமனையின் சிறப்பு மருத்துவமுகாம் மற்றும் சைதை 142 வது வட்டத்தில் அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவமுகாம், சைதை 169 வது வட்டத்தில் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவமுகாமை இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 16,516 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் மூலம் 7,83,443 பேர் பயனடைந்துள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் 357 இடங்களில் இன்று மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 6-ம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் 300 நடமாடும் மருத்துவ குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரியில் இருந்து தற்போது வரை 7,662 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவால் பாதிக்கப்பட்ட 7,662 பேரில் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். ஒருவர் கூட விடுபட்டு போகாத வகையில் வெள்ள நிவாரணம் வழங்கப்படும். ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால்தான் பள்ளிக்கரணை, வேளச்சேரியில் பாதிப்பு அதிகமானது. செங்கல்பட்டில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உபரிநீர் திறக்கபட்டதாலும் வெள்ளப் பாதிப்பு அதிகம். எந்த ஆண்டு பருவமழையோடும் ஒப்பிட முடியாத வகையில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. வெள்ள பாதிப்புகள் குறித்து பேச எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமாருக்கு தார்மீக உரிமை கிடையாது. சென்னை மாநகராட்சி சார்பில் மோட்டார்கள் மூலம் தேங்கிய மழைநீர் விரைந்து அகற்றப்பட்டது.

The post சென்னை சைதாப்பேட்டையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Maj Mahal ,Saithappetta, Chennai ,Subramanian ,Chennai ,Rainy Season Special Medical Camp ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...