×

மானூரில் மாணவி மாயம்

மானூர்: மானூர் வெற்றி திருநகரைச் சேர்ந்த கணேசன் மகள் அனுசியா(19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி நீட் தேர்வு கோச்சிங் சென்டருக்கு அனுசியா சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரது பெற்றோர், தோழி மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதைத்தொடர்ந்து தந்தை கணேசன் மானூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், மாணவி மாயம் என வழக்கு பதிந்து விசாரணை நடத்தி அனுசியாவை ேதடிவருகின்றனர்.

The post மானூரில் மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Manoor ,Manur ,Anusia ,Manur Vetri Thirunagar ,
× RELATED பிரபல டிவி சீரியல் நடிகர் மாயம்